Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

.

இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயக் காணிகளை இந்திய சோலார் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

குறித்த முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் இரு போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாய காணிகளும் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் குறித்த காணிகளை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணி என வர்த்தமாணியின் அடிப்படையில் கையகப்படுத்திய அரச இயந்திரம் தற்போது அதனை இந்தியா சோலார் திட்டத்திற்கு வளங்க திட்டமிட்டிருப்பதாக அறியக்கிடைத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் அங்கு காணப்படும் குளங்கள் புனரமைத்து தரப்படவேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் ஒன்றும் திருகோணமலை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஷன் அக்மீமன மற்றும் சன்முகம் குகதாசன் ஆகியோரிடம் வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.