Breaking News
ரணிலை ஆதரிக்கும் பிரசாரம்: மாத்தறையில் ஆரம்பம்
.
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கவுள்ளார்.
இன்று 16 ஆம் திகதியே இந்தக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மாத்தறையில் ஏற்பட்ட வெள்ள நிலையால் 30 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்பின்னர் ஏனைய மாவட்டங்களிலும் அரசின் வேலைத்திட்டங்களை முன்வைத்து, அதன்மூலம் வாக்கு வேட்டை நடத்தும் பிரசாரம் ஆரம்பமாகவுள்ளது.