Breaking News
சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! - பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !
அர்ச்சுனா பச்சைக்கொடி காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அர்ச்சுனாவின் குறளிவித்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! - பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !
பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக மேலும் மேலும் வழக்குப் பதிவுகள் முறைப்பாடுகள் அதகரித்துச் செல்கின்றது. சகட்டு மேனிக்கு மற்றவர்களைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்தது, மற்றவர்களை தரக்குறைவாக பேசியது என பா உ அர்ச்சுனாவை சட்டங்கள் இறுக்குகின்றன. ரிக் ரொக் சாளினியைச் சொன்னதை சுவஸ்திகா பற்றிச் சொன்னதாக பாராளுமன்றப் பதிவுகள் சுட்டிக்காட்டுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சட்டக்குழு தேடுகின்றது.
மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் என சக பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டிய இடத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ களை கத்தரித் தோட்டத்து வெருளிகள் என அர்ச்சுனா தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது நான் அவர்களை பெயர் சொல்லிச் சொல்லவில்லை என்கிறார். அர்ச்சுனா தற்போது சட்டத்தின் ஓட்டைகளைத் தேடிப்பிடிக்க முயற்சிக்கின்றார்.
அர்ச்சுனாவுடைய போக்குகள் தொடர்பில் அர்ச்சுனா பச்சைக்கொடி காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அர்ச்சுனாவின் குறளிவித்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. "எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். ஆனால் பா உ அர்ச்சுனா இந்த விடயங்களில் திருந்த வேண்டும்'' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.
பா உ அர்ச்சுனா போல் மற்றவர்களைக் கொச்சைப்படுத்தி உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் பா உ இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் பீமல் ரத்நாயக்கா காட்டமான பதிலை பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். சாணக்கியனின் அரசியல் வரலாற்றைப் புரட்டிய அமைச்சர் பீமல் ரத்நாயக்கா மோசமான மோசடியாளர்களான ராஜபக்சக்களுடன் அரசியலுக்கு வந்து அவர்களை நியாயப்படுத்தியவர், பாதகமான செய்களில் ஈடுபட்ட பிள்ளையானோடு அரசியல் செய்தவர் என்றெல்லாம் சாணக்கியனை கிழித்துத் தொங்கவிட்டார் அமைச்சர் பீமல் ரத்நாயக்கா. சாணக்கியன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு தங்களுக்கு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அவரின் பண்பாடான நடத்தையை தான் மதிப்பதாகவும் பீமல் அங்கு சுட்டிக்காட்டினார்.
பா உ சிறிதரனின் பாடசாலையாக அறியப்பட்ட கனிஸ்ட்டா மகாவித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிக்கும் ஆசிரியர் அலன் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகப் பரபரப்புக்குள்ளான இச்செய்தி கிளிநொச்சி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வரையான சிறார்களை அங்கிருந்த மலசலகூடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் அலன் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தன்மீதும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக தற்சமயம் வெளிநாட்டில் உள்ள ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ரெஜிவொல்க் என்ற காணொலி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.