Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனடாவில் தவறான செயலில் ஈடுபட்ட நபருக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனை,

,

கனடாவில் தவறான செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகால சிறை தண்டனை விதித்துள்ளது.

கனடாவின் மொன்றியல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இந்த வரலாற்று ரீதியான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சில பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் துஷ்பியோகங்களை காணொளியாக பதிவு செய்ததாகவும் இந்த சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இணைய வழியில் தொடர்புகளை ஏற்படுத்தி இவ்வாறு குறித்த நபர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தண்டனை கால முடிந்ததன் பின்னரும் பத்து ஆண்டுகள் குறித்த நபர் தீவிர கண்காணிப்பில் தீவிரமாக கண்காணிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு 30 வயதான சமுவெல் மொடிரி என்ற நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்த சந்தேக நபர் 13 பெண்களுக்கு மேல் துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் சுமார் 24 பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதனை நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் குறித்த நபருக்கான தண்டனை அடுத்த விதிக்கப்பட்டுள்ளது.