தமிழரசு கட்சியின் அரசியல் சாணக்கியம் வரவேற்கத்தக்கது: வரவேற்கும் இராதாகிருஸ்ணன்
.
இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தமை இந்த நாட்டையும் சிறுபான்மை மக்களையும் சிந்தித்து எடுக்கப்பட்ட தீர்மானமாகவே தாம் கருதுவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை தமிழரசு கட்சி மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாகவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் அரசியல் சாணக்கியம் நிறைந்தது எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய செயற்பாடானது சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சஜித் பிரேமதாச இந்த நாட்டின் அனைத்து சமூகங்களையும் அரவணைக்கக்கூடியவர்
மிக விரைவில் வடகிழக்கின் ஏனைய சிறுபான்மை கட்சிகளும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க முன்வருவார்கள் என வேலுசாமி இராதாகிருஸ்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.