Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கார்கிவ் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷியா வான்வழி தாக்குதல்

.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2½ ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெடிகுண்டுகளை வீசியது.

இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தைகள் உட்பட 40 பேர் படுகாயமடைந்தனர். அந்த கட்டிடத்தின் 9 மற்றும் 12 வது தளங்களுக்கு இடையில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவின் ராணுவ விமான தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.