விஜய், நீதிபதி சந்துரு, அரசியலர் ரவிகுமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னால் காணொலி திரையிடப்பட்டது. அது ஆதவ் அர்ஜுனாவின் சுயசரிதை.
உள்ளரசியலை உணர்ந்திருக்கிறாரா விஜய்? பட்டியல் சமூகத்துக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்கக் கூடாது.நேற்று அரசியலுக்கு வந்தவர் எல்லாம்துணை முதல் ஆகும்போது?

தமிழ்நாட்டின் ஆட்சியதிகார அரசியலில் இருப்பவர்களைப் பணிய வைத்து செல்வாக்கு செலுத்தக்கூடியவர்கள்இ தங்களதுஅதிரடி நடவடிக்கைகளால் மத்திய அரசை ஒரு பூச்சாண்டிபோல் காட்டிக் காட்டி பயமுறுத்தக் கூடியவர்கள்இ இன்னும்பலவிதமான உள்ளரசியல் வேலைகளைச் செய்யக்கூடிய மீடியேட்டர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துவந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள்; ஏன் எதிர்காலத்திலும் பலர் வருவார்கள்.
பல பிரதமர்களை அகற்றிய ஒருவர்இ மக்கள் வாக்களித்து அங்கீகரித்த தமிழ்நாட்டின் ஆட்சியைக் கவிழ்த்த பழுத்த பழம்ஒருவரும் இந்நேரம் உங்கள் நினைவுக்கு வந்திருக்கக் கூடும்.
இவர்களைப் போன்றவர்கள் செய்யும் செயல்கள்இ தமிழ்நாட்டின் நலனுக்குப் பின்னடைவாக இருந்தாலும் அதை மூடி மறைக்க ஏதாவதொரு இயக்கத்தில் ஒளிந்துகொண்டோஇ அல்லது ஒரு லட்டர்பேட் கட்சி நடத்திக்கொண்டோஇ அல்லது தாங்களே ஒருதன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திக்கொண்டோ காய்களை நகர்த்திக்கொண்டிருப்பார்கள்.
இப்படிச் செயல்பட்டவர்கள்இ செயல்படுபவர்கள் எம்.பி. பதவி உள்பட இன்னபிற பதவிகளைப் பெற்றும் தங்களுக்குவேண்டியவர்களுக்குப் பெற்றுக்கொடுத்தும் தங்கள் 'லாபி'யை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். தமிழ்நாடு முன்னேறிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர்களின் சிபிக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? இவர்களைக்காப்பற்றும் சக்திகள் யாவை என்பதெல்லாம் புதிரானவை!
இவர்களோடு ஆதவ் அர்ஜுனாவை ஒப்பிட விரும்பவில்லை என்றாலும் அவர் அப்படியொரு சக்தியாகத் தன்னைநகர்த்திக்கொண்டு வருகிறாரோ என எண்ணும் விதமாகவே அவருடைய சமீபத்திய நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
விகடன் பிரசுரத்துடன் இணைந்து 'வாய்ஸ் ஆஃப் காமன்' என்கிற அமைப்பு வெளியிட்ட அண்ணல் அம்பேத்கர் பற்றிய புத்தகவெளியிட்டு நிகழ்ச்சியை நினைவு கூருங்கள். விஜய்இ நீதிபதி சந்துருஇ அரசியலர் ரவிகுமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள்முன்னால் இரண்டு நிமிடக் காணொலி திரையிடப்பட்டது. அது ஆதவ் அர்ஜுனாவின் தனது சுயசரிதை.
அதில்இ முக்கியமான இரண்டு தகவல்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தன. 1. இன்றைய ஆளும் கட்சியான திமுக2019 பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வென்றதற்கு ஆதவ் அர்ஜுனா தான் காரணம் என்றும்இ அதற்கான வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்தது ஆதவ் தான் என்றும் பறை சாற்றப்பட்டு இருந்தது. 2. 2021 தேர்தலுக்கும் ஆதவ் அர்ஜுனா வகுத்துக் கொடுத்த திட்டத்தால் தான் திமுக ஆட்சியைப் பிடித்தது என்றும் அந்தக்காணொளியில் வரும்.
அந்தக் காணொலிஇ 100 வருட இதழியல் பாரம்பரியம் மிக்க ஆனந்த விகடன் மேடையில் திரையிட ஒப்புக்கொள்ளப்பட்டது ஓர்ஆச்சரியம் என்றால்இ ஆளும் கட்சியான திமுகவிலிருந்து ஒருவர் கூட இக்காணொலியில் இடம்பெற்ற கருத்துகளை மறுக்கவில்லை என்பதையும் கவனியுங்கள்.
அதேபோல் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து கொத்தாக 72 அப்பாவி மக்கள் மரணமடைந்த கொடூர நிகழ்வுக்குப்பிறகுஇ வி.சி.க சார்பில் இவர் முன்னின்று நடத்திய மது ஒழிப்பு மாநாடு கூர்ந்து கவனிக்கப்பட்டது. வி.சி.க. திமுக கூட்டணியில்இருந்தபோதும்இ திமுக அரசாங்கம் இதுபற்றி சட்டை செய்யவில்லை.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திமுகவின் ஆர்.எஸ். பாரதிஇ மேடையில் திருமாவளவன் உரையாற்றிக்கொண்டிருந்தபோதேஎழுந்து வந்துவிட்டதாகப் பின்னாளில் பேட்டிகளில் குறிப்பிடுகிறார். 'கூட்டணி ஆட்சி வேண்டும்; அதிகாரத்தில் பங்குவேண்டும்' என்றார் ஆதவ்.
குறிப்பாக 'பட்டியல் சமூகத்துக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்கக் கூடாது; நேற்று அரசியலுக்கு வந்தவர் எல்லாம்துணை முதல் ஆகும்போதுஇ திருமாவளவனுக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்கக் கூடாது' என்று மறைமுகமாக உதயநிதிஸ்டாலினைச் சாடினார்!
அதன்பின் திமுகவிலிருந்து வந்த நெருக்கடியால் விசிகவிலிருந்து வெளியே வந்தார் ஆதவ் அர்ஜுனா.
திருமாவளவன் பல பேட்டிகளில் 'ஆதவ் சங்கிகளின் குரலாக ஒலிக்கிறார்; என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆதலால் 6 மாதம் அவரை இடைநீக்கம் செய்கிறோம்' என்று விசிக அறிவித்த சில நாட்களில் அவர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின்னர்இ விஜய்க்கு வியூக வகுப்பாளராக இருந்த ஜான் ஆரோக்கிய சாமியின் ஆடியோ வெளியானது. அதில்இ 'அதில் விஜய்குறித்தும் விஜயின் மேலாளராகவும் மன்றக் காப்பாளராகவும் இருந்துவரும் புஸி ஆனந்த் குறித்தும் பேசியிருந்தார் ஜான்.
இந்த ஆடியோவின் பின்னணியில் ஆதவ் அர்ஜுன் இருக்கிறார் என்கிற தகவலும் கசிந்தது. அடுத்த சில வாரங்களில் ஆதவ்விஜய் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்து வந்த சில நாள்களில் பிரசந்த் கிஷோர் விஜய் சந்திப்பும் நடந்தது.
ஆக 2018இல் ஆரம்பித்து இப்போது வரைஇ பிரசாந்த் கிஷோர் என்னும் தேர்தல் வியூக வகுப்பாளரைத் தமிழ்நாட்டு அரசியலுக்குமூன்று முறை அரசியல் கட்சிகளோடு ஒப்பந்தம் செய்யக் கொண்டு வந்தது ஆதவ் அர்ஜுனா தான் என்பது உறுதியாகிறது. இதுஒரு வகை அரசியல் தரகு வேலைத் தவிர வேறில்லை. உதயநிதியைக் கேள்வி கேட்ட ஆதவ்இ விஜயை ஏற்றுக்கொண்டார். இதுஒருபுறம் இருந்தாலும் ஆதவின் திடீர் அரசியல் வெளிச்சம் சாமானிய மக்களைஇ அரசியல் பார்வையாளர்களைச் சிந்திக்கவைக்கிறது.
2018இல் திமுக வெற்றிக்காகப் பல்வேறு வியூகங்களை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து வகுத்தவர்இ பிறகு திமுகவுடனும்அங்குள்ள பெருந்தலைகளோடும் எவ்வாறு முரண்பட்டுஇ விசிகவில் இணைந்தார் என்பதை அவர் இன்றுவரை வெளிப்படுத்தவேஇல்லை.
விசிகவுக்கு வந்ததும் 'பட்டியல் சமூகத்தின் அரசியல் அதிகார உயர்வுக்காகப் பாடுபடுவேன்' என்றார்.2024 நாடாளுமன்றத்தேர்தலில் விசிகவுக்கு வியூகம் வகுத்துச் செயல்பட்டார். அப்போதுஇ 100 கோடி பணம் இவரால் விசிகவுக்குக்கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் பேசப்பட்டது. தனக்குப் பொதுத் தொகுதி ஒன்று ஒதுக்குமாறு திமுகவிடம் விசிகவழியாகப் பேரம் பேசியதாகவும் செய்தி கசிந்தது. அது நடக்காமல் போனது என்றும் கூறப்பட்டது.
தேர்தல் முடிந்ததும் நல்ல ஒரு மூகூர்த்தத்தில் வாரிசு அரசியலுக்கு எதிராகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார்.
அந்தப் புள்ளியில் தொடங்கிய புகைச்சலைப் புத்தக வெளியீட்டில் ஊதிப் பெரிதாக்கி வெளியே வந்து விஜய் கட்சியில்ஐக்கியமான இவர்இ 'தமிழக வெற்றிக்கழகம் பட்டியல் சமூகத்துக்குத் துணை முதல்வர் பதவி கொடுப்போம்' என விஜயைஉறுதிமொழி கொடுக்கச் செய்வாரா? அல்லது தவெக கட்சித் தலைமைக்கு அடுத்த பதவியிலாவது பட்டியல் சமூகப்பிரதிநிதியை அமர்த்தி அழுகு பார்ப்பாரா என்பதை அவரது வருங்கால நடவடிக்கைகளை வைத்துப் பார்க்க வேண்டும்.
அதேநேரம்இ ஆதவின் மாமனார் மார்ட்டின் லாட்டரி விற்றுக் கிடைத்த பணத்தைப் பற்றியோஇ அவரின் மீதுள்ள வழக்குகள்பற்றியோஇ அன்றாடம் 300 ரூபாய் சம்பாதிக்கும் எளியவர்கள் மிக அதிகமான லாட்டரி வாங்கி வறுமையில் வாழ்வது பற்றியோஇதுவரை அவர் வாய் திறக்கவில்லை. அண்டை மாநிலமான கேரளம் உட்படஇ பல மாநிலங்களில் லாட்டரி விற்பனையும் அதில்புரையோடிக் கிடக்கும் போலி லாட்டரி சீட்டுக் கொள்ளையை நடத்துபவர்களும் இது சாமானிய மக்களை மதுவுக்குஇணையாக அழித்துக்கொண்டிருக்கிறது; அவர்களின் வாழ்வாதாரத்தைத் துடைத்துப்போட்டு வருகிறது என்பது பற்றி ஆதவ்அர்ஜுனாவுக்கு தெரியாதா என்ன?
இப்படிப்பட்ட முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கும் இவர்இ அரசியலில் அடி வைத்துள்ள விஜய பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறாரா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. பணத்தையும் பட்டியலின மக்களின் அரசியல்இசமூக விடுதலைக்கானவளர்ந்துவரும் கருத்தியலையும் பயன்படுத்தி தமிழ்நாட்டு அரசியலை 'கார்ப்பரேட் லாபி'யின் களமாக மாற்ற முயல்வதுமீடியேட்டர்களின் வேலையே தவிரஇ இதுபோன்ற உள்ளரசியலைஇ மாற்றம் விரும்பும் அரசியலர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்பதுதான் என்னைப் போன்ற அரசியல் பார்வையாளர்களின் அவதானிப்பு.
இந்த இடத்தில் ஆதவ் போன்றவர்களை விஜய் போன்ற புதிய அரசியல் நட்சத்திரங்கள் எப்படிக் கையாள்கிறார்கள்என்பதையும் கவனிக்க வேண்டும். விஜய் அரசியலில் வளரட்டும். ஆனால்இ அவர் யாராலும் இயக்க பட்டு விடக்கூடாது. அதுஅவரை நம்பும் சாமானியர்களுக்கு ஆபத்தையே விளைவிக்கும். ஏனென்றால் நாளைய தலைமுறைக்காகவேணும் இன்றுமுன்னெடுக்க வேண்டிய அரசியல் என்பதுஇ சாமானியஇ நடுத்தர மக்களின்இ தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் எல்லாமட்டங்களிலும் உயர்வதை நோக்கிய வளர்ச்சித் திட்டங்களாக இருக்க வேண்டும்.
அதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகம் தேவை. ஆனால்இ கார்ப்பரேட் லாபிகளால்கட்டமைக்கப்படும் ஓர் அரசு மக்கள் நல அரசாக இயங்க முடியாது. ஒவ்வொரு மட்டத்திலும் அதன் கைகள் கட்டப்பட்டிருக்கும். இதை வாக்காளர்கள் சிந்திக்கட்டும் என்று கடந்து போவதுஇ தமிழ்நாட்டு அரசியலில் தொடரும் சாபம்.
- சந்திரன் ராஜா - அரசியல் ஆய்வாளர்இ விமர்சகர்.