Breaking News
“விஜய் கூட்டணி சேர்ந்தால் சேரட்டும், இல்லையெனில் வேலையைப் பார்க்கட்டும்“
.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது,
“2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தன்னிச்சையாகத்தான் போட்டியிடும். விஜயின் அரசியல் பிரவேசத்தால் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
எங்களால்தான் மற்றவர்களுக்கு பாதிப்பு. அண்ணன் செய்வது சரியென்று தம்பி விஜய் ஏற்றால் என்னுடன் கூட்டணியில் இணையட்டும். இல்லையென்றால் அவரது வேலையைப் பார்த்துக்கொண்டு போகட்டும்.
தேசிய மற்றும் திராவிடக் கட்சிகள் தவிர, எனது கனவை ஏற்றுக்கொண்டு என்னுடன் வருபவர்களை ஏற்போம்.
பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை செய்ததைப் போல தமிழர் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.