Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்- ஜனாதிபதி உறுதி

.

 

மன்னார் மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.மன்னார், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மடு மற்றும் சிவனொளிபாத மலை போன்ற புனித தலங்களுக்கான நுழைவு வீதிகள் அவற்றை வழிபட வருவோருக்காகவே அமைக்கப்பட்டுள்ளன. மடு தேவாலயத்தில் வழிபாட்டுக்காக வருவோர் ஏதேனும் உரிய காரணிகளின்றி கைது செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக அது குறித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவிக்கும்படியும் ஜனாதிபதி இதன்போது அறிவித்துள்ளார்.
மடு தேவாலயத்தை வழிபட வருவோருக்காக தேவாலய நுழைவு வீதியின் இரு புறங்களையும் தூய்மைப்படுத்தி அபிவிருத்தி பணிகளை செய்யுமாறு இராணுவத்தினருக்கு இதன்போது ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அத்துடன், அந்த பணிகளுக்காக மன்னார் மறை மாவட்ட ஆயரின் பிரதிநிதி ஒருவர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் காவல்துறையினரை தொடர்புபடுத்திக்கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும் மடு தேவாலயத்தின் உற்சவத்திற்கு முன்னதாக தூய்மைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.