Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வேலையில்லா பட்டதாரிகள்: ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டம்!

,

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு அருகில் தமக்கு வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையில் ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது, அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுப்போருக்கு எதிராக, போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி பொலிஸாரினால் யாழ் நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும், அமைதியாக போராட முடியும் எனவும் கூறி தடைகோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.