பிரிஸ்பேர்னில் இன்று நூல் வெளியீடும் இலக்கிய அரங்கும்
.
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், குயின்ஸ்லாந்து கிளையின் அனுசரணையில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கும் பிரிஸ்பேர்ன் (Brisbane) மாநகரில் இன்று ஞாயிறு ஆகஸ்ட் 4ம் திகதி நடைபெற உள்ளது.
பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகியஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு பிரிஸ்பேர்னில் உள்ள மவுண்ட் ஒமாணி நூலக மண்டபத்தில் நடைபெற உள்ளது.
(Mt Ommaney Library, Mt Ommaney Shopping Centre, 171 Dandenong Road, Mt Ommaney, Brisbane, Queensland)
இன்று ஞாயிற்றுக்கிழமை 15.30 முதல் 17.30 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் ‘தாமரைச் செல்வி’ திருமதி. ரதிதேவி கந்தசாமி அவர்கள் வழங்குவார். அத்துடன் தமிழ் வாழ்த்துப் பாடலை பிரிஸ்பேர்ன் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் பாடவுள்ளனர்.
இந்நிகழ்வின் தலைமையுரையை அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், குயின்ஸ்லாந்து கிளையின் மூத்த செயற்பாட்டாளர் திரு. செந்தில் குமரன் அவர்கள் ஆற்றுவார். பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை திரு. சிவா கைலாசம் நிகழ்த்துவார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை டாக்டர். துஷ்யந்தன் திசைநாயகம் அவர்கள் ஆற்றுவார்.
இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை திரு. ரஜினிகாந்த் ஜெயராமன் அவர்கள் ஆற்றுவார்.
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், குயின்ஸ்லாந்து கிளையின் அனுசரணையில் நடைபெறும் நூல் வெளியீடும் இலக்கிய அரங்கின் ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார்.