Breaking News
உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா வான் தாக்குதல்!
.
உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது இலக்கு வைத்து ரஷ்யா வான் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 18 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பை இலக்கு வைத்து ரஷ்யா நடத்தும் 8ஆவது தாக்குதல் இதுவாகும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த தாக்குதல்களினால் உக்ரைனில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இந்த புதிய தாக்குதலில் 12 ஏவுகணைகளையும் முறியடித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.