Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு இல்லை இரண்டும் ஒரு நாணயம்!

,

தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு தீவிரமடைந்துள்ளதாகவும், அதனால் வெகுவிரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்து முற்றிலும் பொய்யானது. அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு அவதானம் செலுத்த போவதில்லை என்று கைத்தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உப்பு பிரச்சினை தற்போது முடிவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் தற்போது அமைச்சரவை மாற்றத்தை கையில் எடுத்துள்ளார்கள். 

தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.பொதுவான இணக்கப்பாட்டுடன் செயற்படுகிறோம்.

அமைச்சரவை மாற்றம் மற்றும் பிரதமர் பதவியில் மாற்றம் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுக் கொள்வது முற்றிலும் அடிப்படையற்றது. அமைச்சரவையில் சகல உறுப்பினர்களும் கூட்டுப்பொறுப்புடன் செயற்படுகின்ற நிலையில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் ஏற்படவில்லை.

ஊழல் மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவோம். கடந்த கால அரசாங்கங்கள் ஊழல்வாதிகளை பாதுகாத்தது. எமக்கும் ஊழல்வாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

நீதிமன்றம் மற்றும் விசாரணை நிறுவனங்கள் சுயாதீனமான முறையில் செயற்படுகின்றன. நீதிமன்றம் மற்றும் விசாரணை நிறுவனங்களின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை. ஆகவே ஊழல்வாதிகள் கைது செய்யப்படுவதை அரசியல் பழிவாங்கள் என்று குறிப்பிட வேண்டாம் என்றார்.