Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அதிபர்–ஆசிரியர் பிரச்சினையால் மாணவர்கள் பாதிப்பு: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை பெற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து நேற்றைய தினம் (01) முன்னெடுத்துள்ளனர்.நிறைவேற்ற தவறப்பட்டுள்ள வாக்குறுதி

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், அதிபர், ஆசிரியர்களிடையே பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு கடந்த சில மாதங்களாக பாதிப்படைந்துள்ளதாகவும், இதனை சம்பந்தப்பட்ட கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையில் அவர்களால் இப்பிரச்சினைக்கு குறிப்பிட்ட காலத்தில் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளளனர்.

இதேவேளை கணித பாடத்திற்கான ஆசிரியரை பதில் ஆசிரியர் இல்லாது இடமாற்றம் செய்துள்ளதால் மாணவர்கள் கணித பாட செயற்பாடுகளில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், வருகை தந்து பிரச்சினைகளை ஆராய்ந்ததுடன், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்திற்கு சென்று வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.