Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை

ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தநிலையில், தற்போது அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருகின்றனர் இந்நிலையில் குறித்த பகுதியை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையிலேயே குறித்த குளங்களை விடுவிப்புச்செய்து மக்களின் விவசாய பயன்பாட்டிற்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் கருத்து தெரிவித்த , கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்,
இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளபோதும், இராணுவ முகாம் முற்றாக அங்கிருந்து அகற்றப்படவில்லை எனவும் இராணுவம் விடுக்கின்ற இந்தப்பகுதியை வனவளத் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுப் பகுதியாக எடுத்துக்கொண்டு பின்னர் அப்பகுதியிலிருந்து இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்ட பின்னர் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் ஊடாக குறித்த குளங்களுக்குரிய பகுதிகளை அளவீடுசெய்து எல்லைகளை வரையறுத்து வனவளத் திணைக்களத்திடமிருந்து குளங்களுக்குரிய பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் எவ்வாறாயினும் மக்கள் விவசாயத்திற்காக பயன்படுத்துகின்ற இக்குளங்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.