Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஒக்டோபர் முதல் இலங்கையில் மெட்ரோ பேருந்து!

.

ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் இலங்கை போக்குவரத்து சபைக்கு முழுமையாக சொந்தமான நிறுவனமாக நிறுவப்படும் என்றும், ஆனால் அதன் செயல்பாடுகள் தனியார் துறையின் செயல்பாடுகளைப் போலவே இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

அதேவேளை நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஜனவரி 1, 2026 முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பழைய லேலண்ட் மற்றும் டாடா பேருந்துகளில் சீட் பெல்ட்கள் பொருத்தப்படாததால், புதிய சீட் பெல்ட்டைத் தயாரிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையில் தொழில்நுட்பத் துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.