Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கிளிநொச்சியில் சிரட்டையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகிய இராணுவம்; தடைகளைத் தாண்டி இடம்பெறும் நினைவேந்தல்கள்.

பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கை இராணுவத்தினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் சிரட்டையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகிய இராணுவம்; தடைகளைத் தாண்டி இடம்பெறும் நினைவேந்தல்கள்.

கிளிநொச்சியில், இலங்கை இராணுவத்தினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வீதியில் பயணித்த பொது மக்களுக்கு மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.இதன்போதே, வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று பருகியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இன்றைய தினமும் யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

மன்னார்-நானாட்டான் பேருந்து நிலையத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரும் நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தோருக்காக அஞ்சலிலும் செலுத்தப்பட்டது.

மழைக்கு மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில், மத தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.