Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ்த் தேசிய சக்திகளின் கூட்டிணைவு ஆட்சியே வலி கிழக்கில் இடம்பெற்றது!

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ்

தமிழ்த் தேசிய சக்திகளின் கூட்டிணைவு ஆட்சியே வலி கிழக்கில் இடம்பெற்றது என்பதையிட்டு தமிழ்த் தேசிய கொள்கைக் கூட்டினரான நாம் பெருமைப்படுகின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். 

பதவி ஏற்றபின் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் எமது மக்கள் தமிழ்த் தேசிய கொள்கை வழி அரசியலையும் இலட்சியபூர்வமாக நேசிக்கின்றனர். எமது இனம் அரசியல் ரீதியில் நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் விடயமாக உள்ள10ராட்சி மன்ற மன்றங்களை கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் அரசியலின் அடிப்படை தளம் என்ற அடிப்படையிலும் எமது கிராமங்களை நிர்வகிப்பதற்கான அலகுஎன்ற அடிப்படையிலும் இவ் அலகுகூட தேசிய அரசியலின் இருப்பிடமாகவும் கொள்கைவழி பயணத்தின் தளமாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

அந்த அடிப்படையில் ஏற்கனவே கொள்கைவழி கூட்டாக இயங்கும் தமிழ்த் தேசிய பேரவை(சைக்கிள்) மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (சங்கு) கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் முழுமையான உறுப்பினர்கள், கௌரவ உறுப்பினர் இ.ஐங்கரன் மற்றும் தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேற்சைக்குழுக்களின் முழுமையான உத்தியோகபூர்வ பங்களிப்பு மற்றும் பகுதியளவில் தமிழரசுக் கட்சி(வீடு) மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி(மான்) ஆகியன வெற்றிக்கு தேவையான தமது பகுதியளவு பங்களிப்பினை நல்கியுள்ளன.

ஆகவே இங்கு அமையப்பெற்றது தமிழ்த் தேசிய சக்தியின் கூட்டு ஆட்சியாகும். சபையில் நாம் பெற்றதை வெற்றியாகக் கருதவேண்டாம். நாம் அடைந்துள்ளது தேசியத்தின் உறுதியான நிலைப்பாட்டுடன் கொள்கைவழி அரசியலை முன்னெடுப்பதற்கான பொறுப்பே எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் 5 வருடங்கள் சபையில் ஆட்சியை அரசியல் கட்சி பாரபட்சமற்ற வகையில் நான் முன்னெடுத்துள்ளேன். அவ்வாறாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாகவும் ஊழலற்ற வகையில் கொள்கைவழி அபிவிருத்தியை முன்னெடுத்தமைக்கும் மத்திய அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மீறியபோது போராடியமைக்குமாகவே எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஆணையினை எமது சபையின் கொளரவ உறுப்பினர்கள் தந்தார்கள். ஒத்தழைத்த உறுப்பினர்களின் நிபந்தனை வலி கிழக்கின் மாண்பை மேலும் உயர்த்துகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.