தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
மிரட்டுகிறதா NPP? இதுவும் ஒருவகையான தமிழ் இன அழிப்பு !

தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கனடாவில் பிரிம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் தமிழின அழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்து வெளியிட்ட அவர்,
”இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கனடாவின் பிரிம்டன் நகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள குறித்த நினைவுத் தூபிக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இறுதி யுத்தத்தில் நந்திக்கடல் பகுதியில் கை குழந்தைகளுடன் வந்தவர்களைக்கூட எமது இராணுவத்தினர்தான் காப்பாற்றியிருந்தனர். இன அழிப்பு என்பது தமிழர்களை இராணுவத்தினர் தேடி தேடி கொலை செய்திருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெற்றதா? யுத்தக்காலத்தில் சரணடைந்த அல்லது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவர்களை இராணுவத்தினர்தான் காப்பாற்றியிருந்தனர்.” என்றார்.
இதேவேளை, தமிழ் இன அழிப்பு உள்ளிட்ட பதங்களை பயன்படுத்தி கோஷங்கள் மற்றும் பதாதைகள் வைக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இம்முறையும் இந்தப் பதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எதுவும் ஏன் எடுக்கப்படுவதில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்
இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இது இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதற்கான வியூகமா?
”இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது.
இதுவும் ஓரு வகை இனவாதம் தான். தமது வாக்கு வங்கி 6 மாதத்தில் குறைந்தவுடன் நாட்டை காக்கும் வீரர்கள் என தங்களை சிங்கள மக்களிடம் காட்ட வேண்டியுள்ளது.
இவர் கட்சியிலுள்ளவரே, சில வாரங்களுக்கு முன், பட்டலந்த வதைமுகாமில் சிங்கள மக்களையே இவ்வாறு சித்திரவதை செய்திருப்பார்களென்றால், யுத்த காலத்தில் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்களென்று பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் சந்தேகம் எழுப்பியிருந்தார். இவரும் அங்கேதானே இருந்தார், ஏன் இவரால் பதில் சொல்லமுடியவில்லை? இதே அனுரா, பத்திரிகையாளர் சந்திப்பில், வடக்கில் உள்ளதுபோன்று தெற்கில் இராணுவ காவல் அரண்கள் இல்லை, இன்றும் தங்கள் பிள்ளைகளை தேடி அலைகின்றனர்என்று சொன்னாரே, அதற்கு இவர் பதில் என்ன? நீங்கள் சம்பளத்திற்காக போரிட்டவர்களை நினைவு கூரலாம் என்றால், நாம் ஏன் நம் வீரர்களை நினைவு கூரக்கூடாது? நீங்கள் எங்கள் சொந்த மண்ணில் விகாரைகளை அமைத்துக்கொண்டு நல்லிணக்கம் என்றால், கனடாவில் உள்ள நினைவுத்தூபியால் எப்படி நல்லிணக்கம் குலையும்? பகுத்தறிவு இல்லாதவர்கள் படித்தாலென்ன, படிக்காவிட்டாலென்ன எதுவும் மாற்றமடையாது? உரத்து சொல்லுங்கள், தமிழ் இன அழிப்பு இலங்கையில் நடைபெறவில்லையென, சர்வதேசம் எங்கும் இனவழிப்பிற்கான குரல்களும், நினைவாலயங்களும் கிளம்பும். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். நாளடைவில் சிங்கள மக்களே, இனஅழிப்பினாலேயே இந்த நாடு அழிந்தது, தனித்து விடப்பட்டது என நீதி தேடி அலைவார்கள். சர்வதேசம் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறது? ஆதாரங்களை அவரவர் புகைப்படங்களுடன் வெளியிட்டு நிரூபிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. எங்களுடைய இன்றைய இந்த துயர நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஐ .நா. சர்வதேச நாடுகளே காரணம்! ஏன் ஐ நா சபைக்கு காலத்திற்கு காலம் காவடி எடுக்கிறீர்கள்? கொழும்பில் தமிழரை தேடித் தேடி கொல்லவில்லையா? அல்லது அப்போது இவர் பிறக்கவில்லையா? இவரைப்போல் பொய்யன் வேறு யாருமில்லை. இனவழிப்பு நடைபெற வில்லையென்றால், விசாரணைக்கு தயங்குவதேனோ? அதற்கான காரணத்தை அறிவியுங்கள்! மைத்திரிபால சொன்னார், "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறி விட்டது." என, அப்போ இந்த வெளிவிவகார அமைச்சர் எங்கே போயிருந்தார்? தன்நாட்டில் நடந்தவை அறியாத, மறந்த இவருக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?அழிவினை சந்தித்த தமிழ் மக்களி குரல்கள் இவ்வாறுதான் இருக்கம் இன்னும் பலமாக ஒலிக்கும்