Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வாகன இலக்கத் தகடுகளை எதிர்வரும் 2026 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு வாகன உரிமையாளர்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

வாகன இலக்கத் தகடுகளை எதிர்வரும் 2026 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு வாகன உரிமையாளர்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத வாகன இலக்கத் தகடுகளை எதிர்வரும் 2026 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு வாகன உரிமையாளர்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட கிளைகள் உட்பட திணைக்கள வளாகங்களில் சுமார் 1,000,000 இலக்கத் தகடுகள் தேங்கிக் கிடப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவிக்கிறது. 

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட போதிலும், விண்ணப்பதாரர்களால் இதுவரை அவை பெற்றுக்கொள்ளப்படாததே இந்தத் தேக்கத்திற்குக் காரணமாகும். கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள் தங்களது இலக்கத் தகடுகளை நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். 
ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட செயலகங்களில் அமைந்துள்ள அந்தந்த மோட்டார் போக்குவரத்து திணைக்களக் கிளைகளுக்குச் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து இலக்கத் தகடுகளும் உடனடியாகப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள திணைக்களம், அவ்வாறு செய்யத் தவறினால் நிர்வாக ரீதியான தாமதங்கள் ஏற்படக்கூடும் என உரிமையாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் அல்லது மேலதிக விபரங்களுக்கு, பொதுமக்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இலக்கத் தகடு பிரிவை 011-2033333 என்ற இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.