அனுரவுக்கான மக்கள் விருப்பு வீதம் அதிகரிப்பு: பாரிய வித்தியாசம்
.
கட்சித் தலைவர்கள் மீதான பொதுமக்கள் விருப்பு தொடர்பிலான ஆய்வில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மீதான விருப்பு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் பாரியளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார கொள்கை நிறுவகத்தினால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆய்வு அறிக்கை கூறுகிறது.
அதன்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் அவருக்கான விருப்பு 29 புள்ளிகளால் அதிகரித்து மூன்று சாதகமான புள்ளிகளாக மாறியுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பின்தள்ளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான மக்கள் ஆதரவு 40 புள்ளிகள் அதிகரித்து -24 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
அதன்படி, சஜித் பிரேமதாசவுக்கான விருப்பு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் இரண்டு புள்ளிகளால் அதிகரித்து 42 புள்ளிகள் எதிர்மறையாக மாறியுள்ளது.
எவ்வாறாயினும், சாதகமான மக்கள் ஆதரவைப் பெற்ற ஒரே கட்சித் தலைவராக அனுரகுமார திஸாநாயக்க மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.