Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பாதால உலகின் “லொக்கு பெட்டி” இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

,

தெற்கில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான “லொக்கு பெட்டி” என்றழைக்கப்படும் லந்துவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழுவால் பெலாரஸிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை (04.05.24) அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர், ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் 7வது படைப்பிரிவில் பணியாற்றியவர்.

கிளப் வசந்தா கொலை, கொலைகள், துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான குற்றங்களுக்காக அவர் மீது இந்த நாட்டின் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர், பெலாரஸிலிருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து, ஞாயிற்றுக்கிழமை (04) காலை 7.48 மணிக்கு ஃப்ளைடுபாய் FZ-579 விமானத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரை நுகேகொடையில் உள்ள மேற்கு தெற்கு குற்றப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்