Breaking News
கயிறு இழுத்தல் போட்டியில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவாகிய, வீனஸ் கழக ஆண் பெண் அணியினர்
,

இன்று இடம் பெற்ற மாவட்ட மட்ட கயிறு இழுத்தல் போட்டியில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவாகிய, வீனஸ் கழக ஆண் பெண் அணியினர் பங்கு பற்றிய நிலையில் பெண் அணியினர் வெற்றியிட்டி கொண்டுள்ளனர்.
இந்த கயிறு இழுத்தல் போட்டியில் ஆண்கள் ஆணி அரை இறுதி போட்டிக்கு தெரிவாகிய நிலையில் தோல்வியை சந்தித்தது.
எனினும் அவர்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
இவர்களுக்கு கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
எதிர்வரும் 10, 11, 12 ஆம் தேதிகளில் ஆண்கள் பெண்களுக்கான கரப்பந்தாட்டம் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகள் இடம் பெற உள்ளதனால் அணியினர் தங்களை தயார் படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.