Breaking News
ரணில் மற்றும் நாமலின் முக்கிய ஆதரவாளர் நாட்டில் இருந்து வெளியேறினர்: விமான நிலைய தகவல்கள் தெரிவிப்பு
.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளிநாடு செல்லவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இன்று (22) அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் காலம் முழுவதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக இத்தேகந்தே தேரர் பிரச்சாரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்றிரவு (21) நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு 11.15 மணியளவில் அவர் பாங்காக் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.