அனுரகுமார திஸாநாயக்கவை உடனடியாக கைது செய்யுங்கள்; புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சிவில் அமைப்பு ஒன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தகவல்களை மறைத்து அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அநுரகுமார திஸாநாயக்கவை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி அந்த அமைப்பின் சார்பில் தர்ஷன தந்திரிகே உள்ளிட்டோரால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்க அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதாக அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் லால்காந்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பிரகாரம் அனுரகுமார திஸாநாயக்கவை பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு குறித்த சிவில் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.