Breaking News
அரசின் அதிரடி அறிவிப்பு: இலங்கை போக்குவரத்து சேவைகளில் பெண்கள்.
.

இலங்கை போக்குவரத்து சபை சேவை மற்றும் புகையிரத சேவையில் பெண்களை சேர்ப்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (7) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து சேவை
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மகளிர் தினத்தை முன்னிட்டு, எங்கள் அமைச்சின் அமைச்சர்கள் இலங்கை போக்குவரத்து மற்றும் தொடருந்து சேவைகளில் பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளனர்.
பெண்கள் சில நாட்களில் பேருந்து ஓட்டுநர்களாகவும் ரயில் சாரதிகளாக, பாதுகாவலர்களாகவும் பணியாற்ற முடியும் என்பதுடன் பாடசாலை பேருந்துகளை பெண்களுக்கு ஒப்படைக்க கூடிய வாய்ப்புகளும் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.