முஸ்லிம்தமிழ் மக்களின் குருட்டுப் பக்கம்..
இன்றைக்கு அது பிழையான முடிவாக தெரிந்தாலும் அன்றைக்கு அது தான் சரியான முடிவாக இருந்த ஒரேயொரு தெரிவாகும்!
1990அன்று யாழ்ப்பாணத்தில் சுமார் 500 வரையான முஸ்லிம்தமிழ்க் குடும்பங்களும் ஐந்து லட்சம் வரையான தமிழ்க் குடும்பங்களும் வாழ்ந்து வந்தனர்.
இன்று முஸ்லிம்தமிழ் மக்களில் சிலர் தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்வுகளை கொட்டி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
1990 முஸ்லிம்தமிழ்ச் சகோதரர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டதையும்..
1990 ஆம்ஆண்டு ஆயுத தாரிகளால் நடத்தப்பட்ட குருக்கள் மடம் கொலைகளையும் நினைவு கூர்கிறோம், புதைகுழி தோண்டுகிறோம் என்ற பெயரில் தமிழ் மக்கள் மீதான குறிப்பாக எமது போராட்டம் மீதான வக்கிரமப் பார்வையை தான் வெளிப்படுத்துகின்றனர்.
உண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்படுவதானது ஒரு துன்பியல் நிகழ்வாக இருந்தாலும் இன்றைக்கு அது பிழையான முடிவாக தெரிந்தாலும் அன்றைக்கு அது தான் சரியான முடிவாக இருந்த ஒரேயொரு தெரிவாகும்.
அன்று யாழ்ப்பாணத்தில் சுமார் 500 வரையான முஸ்லிம்தமிழ்க் குடும்பங்களும் ஐந்து லட்சம் வரையான தமிழ்க் குடும்பங்களும் வாழ்ந்து வந்தனர்.
இந்த 500 குடும்பங்களினுள் அனேகர் இராணுவத் தளபதி டென்சில் கொப்பேக்கடுவவுடன் தொடர்பிலிருந்தனர். அத்துடன் காட்டிகொடுப்புக்களும் செய்தனர்.
இப்போது கொப்பேக்கடுவ ஒருமாஸ்டர் பிளான் போட்டார். அதாவது அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டு தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் ஊடுருவ விட்டு முஸ்லிம்தமிழ்களை வைத்தே புலிகள் அமைப்பின் போராளிகளை கொல்வதுதான் கொப்பேக் கடுவவின் திட்டம்.
நீங்கள் கேட்கலாம் ஏன் இதற்கு தமிழ் ஆயுதக்குழுக்களை பயன்படுத்தலாம்? தானே ஏன் முஸ்லிம்தமிழ்களை பயன்படுத்தினார் என்று. இதற்கான காரணம் முஸ்லிம்தமிழ் இளைஞர்களும் விடுதலைப் போராட்டத்தில் இணைய ஆரம்பித்தமையும் முஸ்லிம்தமிழ் மக்களிடமும், தமிழ் மக்களிடமும் காணப்பட்ட பலமான இணை உறவு நிலையுமாகும்.
முஸ்லிம்தமிழ்மக்களும் தமிழ் மக்களும் உறவாக இருந்தால் விடுதலைப்போராட்டம் பலமடைந்தால் அதனை அழிக்க முடியாது. எனவே முஸ்லிம்களையும் தமிழர்களையும் மனநிலை ரீதியாக எதிரிகளாக்கி அடிபட விடவேண்டும் என்பதே அவரது எண்ணம்.
தமிழர்களின் பகுதிகளில் போராளிகளை கொல்ல முஸ்லிம்களை பயன்படுத்தினால் தமிழர்களின் கோபம் முஸ்லிம்கள் மீது திரும்பும் என்பதும் அதேவேளை தமிழர்களை போன்று வேட மிட்ட குழுக்களை வைத்து முஸ்லிம்களில் சிலரை கொலை செய்தால் முஸ்லிம்களின் கோபம் தமிழ் மக்கள் மீது திரும்பும் என அன்றைய சிங்கள மூளைகள் யோசித்தன.
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் முஸ்லிம் கைக்கூலிளால் தமிழர் பகுதிகளில் பல படுகொலைகள் நடத்தப்பட்டது. முஸ்லிம் ஊர்காவல் படை, ராசிக்குழு, ஜிகாத் அடிப்படை வாத அமைப்பு போன்றன இதற்காக களத்தில் இறக்கப்பட்டன.
மாறாக தமிழர்களில் காணப்பட்ட சில சிங்கள கைக்கூலிகளை வைத்து குருக்கள் மடம் காத்தான்குடி போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீது வன்முறைகளும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. யாழ்ப்பாணத்திலும் இது போன்ற தமிழ் முஸ்லிம் மோதலை உருவாக்க முஸ்லிம்களின் சில வீடுகளுக்கு ஆயுதங்கள் தருவிக்கப்பட்டதை புலிகளின் புலனாய்வுத்துறை கண்டு பிடித்து விடுகின்றது. சித்தித்து பாருங்கள் ஐந்து லட்சம் தமிழர்கள் வாழும் இடத்தில் சொற்ப அளவான முஸ்லிம்களோடு மோதல் ஆரம்பித்தால் என்ன நிகழும்.
இருக்கும் முஸ்லிம்கள் அத்தனை பேருமே கொலை செய்யப்பட்டிருப்பர். அது ஒரு முஸ்லிம்கள் மீதான தமிழ் மக்களின் இனப்படுகொலையாக மாறியிருக்கும்.
இதனைவிட முஸ்லிம்களை தமிழ் ஆயுதக் குழுக்களையோ அல்லது சிங்கள இராணுவத்தை வைத்தோ கொலை செய்துவிட்டு அதற்கான பழியை புலிகள் மீது போட்டால் அதுவும் சிக்கலான நிலையை கொண்டுவந்து ஆகக்கூடிய இழப்பை முஸ்லிம் மக்களுக்கே ஏற்படுத்திவிடும்.
இதனை தடுக்க இந்த மோதலுக்கு சிங்கள தரப்பால் கருவியாக பயன்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். தலைமையால் மிகவும் சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவாகும். அதுவே அன்றைய ஆகச் சிறந்த சரியான முடிவாகும்.
இதன் மூலம் முஸ்லிம்களுக்கு தமிழ் மக்களால் நிகழ இருந்த அசம்பாவிதங்களிலிருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டதுடன் சிங்களத்தின் கனவுகளும் பலிக்காமல் போனமை வரலாறு. அதன் பின்னர் சிங்களம் பிளேட்டை திருப்பி மாற்றி போட்டது. அதாவது வடக்கிலிருந்து உங்களை விரட்டிவிட்டார்கள். அவர்கள் வன்மம் பிடித்தவர்கள். உங்களை தமிழ்மக்களோடு சேர்ந்து வாழ விடமாட்டார்கள். நீங்களும் புலிகளின் எதிரிகளே. குருக்கள் மடம் காத்தான் குடி போன்ற இடங்களில் உங்களை கொன்றது புலிகளே. என்று முஸ்லிம்களின் மனதை தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு மாற்றினார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை அந்த காழ்ப்புணர்வு குரோத மனநிலை முஸ்லிம்களுக்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வன்னம் 2009 இல் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த போது வெற்றிக் களிப்பில் சிங்களவரோடு சேர்ந்து பால் சோறு சாப்பிடுமளவுக்கு இருந்துள்ளது.
ஆனால் தமிழ் மக்களோ பல முறை அவர்களுக்காக விட்டுக் கொடுத்துள்ளனர். கடந்த மாகாணசபையில் முதலமைச்சர் பதவியை கூட விட்டுக் கொடுத்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் தேசிய தலைவர் அவர்கள் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை ஒரு துன்பியல் நிகழ்வு என வருத்தம் தெரிவித்து அதற்காக ரவூப் ஹக்கீமிடம் மன்னிப்பும் கேட்டார். மேலும் முஸ்லிம்கள் விரும்பினால் வடக்கில் மீளவும் குடியேறலாம் என பொது அறிவிப்பும் விடுத்தார்.
இதனை விட முஸ்லிம் மக்களின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் எவற்றையும் ஆவணப்படுத்துவதையோ பேசு பொருளாக்கப்படுவதையோ அல்லது நினைவேந்தல் செய்வதையோ தலைவர் விரும்பவில்லை. அதற்கு தடை விதித்தார். அது சந்தர்ப்ப சூழ்நிலையால் சிங்கள கைக்கூலியாகி தமிழ் மக்கள் மீது மேற்கொள்ப்பட்ட விடயம். அதறை நாம் பேசினால் இன்னும் எமக்கும் முஸ்லிம்களுக்கும் முரண்பாடே வளரும். அதனால் அவற்றை மறந்து விடுவோம் என தலைவர் பலமுறை தெரிவித்தார்.
ஆனால் முஸ்லீம்களோ சிங்கள மூளைகளின் கதைகளை நம்பி இன்றுவரை காத்தான்குடி பள்ளிவாசலை இன்றும் அப்படியே வைத்திருக்கிறார்கள். புலிகள் செய்யாத கொலைகளை பு லிகள் தான் செய்ததாக பொய்யாக நம்பிக்கொண்டு இன்றுவரை அடுத்த சந்ததிக்கும் அந்த வரலாற்றை கடத்தி தமிழ் மக்கள் மீதான குரோதத்தை வளர்த்து வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியே குருக்கள் மடத்தை தோண்டுகின்ற செயற்பாட்டிற்கான முனைப்புகளுமாகும். ஆயுத தாரிகளின் கொலைகள் அனைத்தும் அன்றைக்கு புலிகள் மீதே போட்டு கொலைகாரர்கள் தப்பித்து வந்துள்ளமையும் கண்கூடு.
இன்று ஆட்சியை பிடிக்க ராஜபக்சாக்களும் இதே வழிமுறையைத் தான் கையாண்டுள்ளனர். ஸஹரான் கும்பல் இதற்கான கருவியாக அவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனாலும் தமிழ் மக்கள் சிங்கள மூளைகளுக்குள் சிக்காமல் சுயமாக சிந்தித்து முஸ்லிம் மக்களையும் தமிழ் பேசும் சகோதரர்களாக கருதியமையால் அவர்கள் செய்த துன்பங்களை மறந்து மன்னித்துவிட்டார்கள்.. தமிழ் மக்களால் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு மன்னிப்பும் கேட்டுவிட்டார்கள். ஆனால் முஸ்லிம்களோ இன்றும் குருட்டுப் பக்கத்தையே பார்த்துக்கொண்டு தமிழ் மக்களை விரோதிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தான் வடக்கு கிழக்கு இணைவதை கூட அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. முஸ்லிம் மக்கள் உண்மைகளை புரிந்து சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலை கைவிட்டு வெளிவந்து அதற்குள் சிக்காமல் சுயமாக சிந்திக்கும் வரை விழிப்படையும் வரை இந்த குரோத மனநிலை இருந்து கொண்டே தான் இருக்கும்.
- திருச்சி இனியன்


