Breaking News
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது,
,
சென்னை ஈ.சி.ஆர். சாலையில், கடந்த 25ஆம் தேதி காரில் சென்ற பெண்களை, தி.மு.க. கொடி கட்டிய இரண்டு கார்களில் பயணித்த இளைஞர்கள் துரத்திய சம்பவத்தில், கல்லூரி மாணவர் உட்பட 5 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 25ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு தோழியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை இரண்டு கார்களில் வந்த 8 வாலிபர்கள் பின்தொடர்ந்தனர்.
முட்டுக்காடு பாலம் அருகே, அவர்கள் இரண்டு கார்களை சாலையின் குறுக்கே நிறுத்தி, பெண்கள் சென்ற காருக்கு வழி விடாமல் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் வழக்கு பதிந்ததன் விளைவாக தற்போது வரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,