Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணில் வெற்றி பெறுவது உறுதியில்லை என மறைமுகமா தெரிவிக்கின்றாரா சந்தோஷ் ஜா?

.

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

கண்டியில் பௌத்த மதத் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் தெரிவுகளை மதிப்பது குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டையும், இரண்டு நாடுகளில் எவர் ஆட்சி செய்தாலும் வலுவான இருதரப்பு உறவுகளை பேணுவது குறித்த உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.

இலங்கை மக்களே தெரிவு செய்ய வேண்டியவர்கள், இலங்கை தீர்மானிக்கும், இலங்கை மக்கள் தீர்மானிக்கும் எதனையும் நாங்கள் மதிப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் , இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவோம். எங்கள் நட்பு என்பது அனைத்து இலங்கைக்கும், அனைத்து இலங்கையர்களுக்குமானது என்றும் கூறியுள்ளார்.

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்தியத் தூதுவர்,

“இதற்குச் சில காலம் எடுக்கும். இது நீண்ட திட்டம். இது ஓரிரு வருட திட்டம் இல்லை. எவ்வளவு காலம் நீடிக்கும் எனத் தெரிவிக்க முடியாது. ஐந்து, ஆறு வருடங்கள் நீடிக்கலாம். இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவதிலேயே இது தங்கியுள்ளது. இதனைப் பரஸ்பர இணக்கப்பாடு புரிந்துணர்வுடனேயே முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.