Breaking News
*குடமுழா* ' அழிந்து போன தமிழர்களின் இசைக் கருவி!!
.
*குடமுழா* அழிந்து போன தமிழர்களின் இசைக் கருவி!!
கி.பி 1-ம் நூற்றாண்டு. இந்த குடமுழுவம் இசைக் கருவி,தேவாரத்தில் "குடமுழா"என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து,ஒரு காலத்தில் சோழ மண்டலத்தில் பெருவாரியாக இந்த அரிய இசைக் கருவி பாவனையில் இசைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.. தேவாரத்திற்கு முந்திய கி.பி முதலாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்திலும் இந்த "கடமுழுவம்" இசைக்கருவி இசைக்கப்பட்டிருக்கிறது... இந்த இசைக் கருவி தற்போது, ஈழம் மற்றும் தமிழத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது!!திருவாரூர் தியாகராசர் மற்றும் திருத்துறைபூண்டி மருந்தீசுவரர் கோயில்களில் மட்டுமே இந்த அரிய இசைக்கருவியான குடமுழுவத்தை காண முடியம். வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமான குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும். வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் வெவ்வேறு விதமான பண்(இசை) எழுப்பப்படும். சங்க இலக்கியங்கள் குடமுழுவத்தை பற்றி ஏராளமான பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. மேலும், பாேர் வீரர்களின் தோல் வலிமைக்கும், பலாப்பழத்திற்கும், பனைமரத்தின் அடிக்கும் இக் கருவியை ஒப்பிட்டு பல சங்ககால பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன...