Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கைக்கு தற்போது அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமற்றது

.

இலங்கைக்கு தற்போது அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமற்றது எனவும் ஜனாதிபதி தேர்தலே அவசியமானது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தேசத்திற்காக ஒன்றுபடுதல் எனும் தொனிப்பொருளில் கம்பஹாவில் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதித் தேர்தலை சிலர் ஒத்திவைக்க முயற்சிக்கின்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தலை செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டும்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு 2028ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாடு திவாலாகும் அபாயம் காணப்படுகின்றது.அந்த காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் எமது கட்சிக்கு உள்ளது.

ராஜபக்ச ஆதரிக்கும் எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். எங்களுடைய வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் எனும் போர்வையில் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.