Breaking News
யாழில் மோடியின் வெற்றியை கொண்டாடிய சிவசேனை அமைப்பு.
.
யாழில் மோடியின் வெற்றியை கொண்டாடிய சிவசேனை அமைப்பு.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர்.