Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எங்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பதுகுறித்து தமிழரசுக் கட்சி பேச்சு நடத்தலாம்; தேசிய மக்கள் சக்தி

.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எம்முடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தரப்புகள் எம்முடன் பேச்சு நடத்தலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க முன்வந்தால் அது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாடு என்னவாக இருக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிந்த லால்காந்த கூறியவை வருமாறு:-

“அவர்கள் (தமிழரசுக் கட்சியினர்) எம்முடன் கலந்துரையாடும் விடயங்கள் எவை என்பது பற்றி பரிசீலிக்க வேண்டும். அவற்றுக்கு நாம் இணங்குகின்றோமா அல்லது இல்லையா என்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எவர் வேண்டுமானாலும் எம்முடன் பேச்சு நடத்தலாம். ஆனால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எவை, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அவை தடையாக உள்ளனவா, எமது கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றனவா என்பன உள்ளிட்ட விடயங்கள் ஆராய்ந்த பின்னரே அது தொடர்பில் முடிவெடுக்கப்படும்.” – என்றார்.