Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உயிருடன் இருக்கும் ஹம்சா பின்லேடன்: மீண்டும் தாக்குதலுக்கு தயாராகிறாரா ஒசாமா மகன்?

.

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 3,000 கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடியது.

10 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் 2011, மே 2-ம் தேதி சுட்டுக்கொன்றனர்.

ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹம்சா பின்லேடன் 2019-ம் ஆண்டில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தி மிர்ரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் உள்ளான் என ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் எதிர்ப்பு ராணுவ அமைப்பான என்.எம்.எப். என்ற அமைப்பு தெரிவிக்கிறது.

2021 ஆப்கானிஸ்தானில் அதிபர் ஆட்சி முடிவுக்கு வந்து தலிபான்கள் கைப்பற்றியபோது பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கான பயிற்சி மையம் அமைத்து 450 பாகிஸ்தானியர்கள் ஹம்சா பின்லேடனுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றனர்.

அவனது கட்டளையின் கீழ், அல்-கொய்தா மீண்டும் ஒருங்கிணைந்து வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது.

ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்-கொய்தா விவகாரங்களை கவனித்து வரும் அய்மன் அல்-ஜவாஹிரியுடன் ஹம்சா பின்லேடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.