கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களிடம் கூறினேன்.
இன்னொரு தலைமையை உருவாக்கி போராடாமல் அவரின் வருகைக்காக காத்திருக்கும் நிலையை மக்களுக்கு ஏற்படுத்தி வைப்பது.
ஹோசிமினை எப்படி நினைவு கூருவது?
இன்று வியட்நாம் தந்தை என புகழப்படும் ஹோசிமின் அவர்களின் 134 வது பிறந்த தினம் ஆகும்.(19.05.1890) 26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் ஹோசிமின் அவர்கள்.
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று ஹோசிமின் அவர்களிடம் கேட்டபோது ' கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களிடம் கூறினேன். அவர்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்' என்றார்.
ஆனால் இன்று சில தமிழ்த் தலைவர்கள் உண்மையை மக்களிடம் கூறுவதற்கு தயங்குகிறார்கள். தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என உண்மையாகவே அவர்கள் விரும்புவார்கள் எனில் அவர்கள் ஹோசிமின் கூறியபடி கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மக்களுக்கு கூற முன்வரவேண்டும்.
உதாரணமாக தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது கசப்பான ஒரு உண்மையாகும். அதை மக்களுக்கு சொல்ல தயங்குவதால் இன்னொரு தலைமையை உருவாக்கி போராடாமல் அவரின் வருகைக்காக காத்திருக்கும் நிலையை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அதுமட்டுமன்றி இந்தியா மிகப்பெரிய வல்லரசு. அதனை எதிர்த்து ஈழத் தமிழர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறுபவர்களும் ஹோசிமின் வரலாற்றை படிக்க வேண்டும்.
வியட்நாம் மக்களால் அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்பை விரட்டியடிக்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியாது? நிச்சயமாக முடியும்!