கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; 52 மனித எச்சங்கள் அடையாளம்
.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் நேற்றுடன் நிறைவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 52 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 10ஆவது நாளான நேற்றுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வுப் பணியின்போது துப்பாக்கிச் சன்னம், திறப்பு கோர்வை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், கிராம சேவையாளர் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் பத்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.