தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கா?; தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கை வெற்று கோஷம்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு வடக்கில் உள்ள கட்சிகள் முயற்சி!
தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கா?; தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கை வெற்று கோஷம்.
கொண்ட குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு வடக்கில் உள்ள ஓரிரு கட்சிகள் முன்னெடுத்துவரும் முயற்சி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர்,
“தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயமெல்லாம் வெறும் அரசியல் கோஷங்கள் மாத்திரமே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினால் தான் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய சூழ்நிலை உருவாகும்.
இலங்கையிலேயே இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற கட்சியென்றால் அது ஐக்கிய தேசியக் கட்சியாகும்.அனைத்து இன மக்களும் ஓரணியில் திரளக்கூடிய கட்சியாகவும் அந்த கட்சி திகழ்கின்றது.
‘ஸ்ரீலங்கா பெஸ்ட்’ என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுபவர் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க.அதனால்தான் சிறுபான்மையின மக்களின் காவலனாகக் கருதப்படும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் பேராதரவு வழங்கிவருகின்றனர்.
எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். இதனை குழப்புவதற்கு சில தமிழ் அரசியல் வாதிகள் முற்படக்கூடாது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின் கீழ்தான் தமிழ் பேசும் மக்களின் அபிவிருத்தி அரசியல் மற்றும் உரிமை அரசியல் என்பவற்றை வென்றெடுக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.