சுயேச்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னப் பட்டியலில் பன்றி, நாய் வெளியேற்றம் !
.
தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் சின்னங்களை ஒதுக்கி சுயேச்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களின் பட்டியலை தேர்தல் ஆணையதயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது !.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள், அவற்றின் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் . அதுதவிர ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சின்னங்கள் சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்களின் விருப்பங்களின் அடிப்படையில் ஒதுக்கப்படும் .
பன்றி மற்றும் நாய் போன்ற சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவை வேட்பாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய சின்னங்கள். மேலும் அவர்கள் சில சமூகங்களின் மத உணர்வுகளை புண்படுத்தலாம் என்ற அடிப்படியில் இவை தவிர்க்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியல் தற்போது வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சுயேச்சை வேட்பாளர்கள் எந்த சின்னத்தையும் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு. ஒரே சின்னம் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களால் கோரப்பட்டால், அது குலுக்கல் மூலம் ஒதுக்கப்படும். மத, கலாச்சார முக்கியத்துவங்களைக் குறிக்கும் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.