Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சமஸ்டி பிரிவினையல்ல... நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல - சி.வி.கே.சிவஞானம்

.

சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அநுர குமார திசாநாயக்க இதனை புரிந்து புத்தாண்டில் செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபை தேர்தலில்
ஏற்கனவே இருப்பவர்களுக்கு மட்டும்தான் கட்சி வாய்ப்பு அளிக்கும் என்ற கருத்து இருப்பதால் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு இளைஞர்கள் பலர் முன்வருவதில்லை என்று ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் மீளவும் புதிய தெரிவு இடம்பெற வாய்ப்புள்ளது.

இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் மூலக்கிளைகள் ஊடாக அங்கத்துவத்தைப் பெற்று இரண்டு வாரங்களுக்குள் கட்சி இணைந்து கொண்டால் கட்சி தீர்க்கமான நல்ல முடிவை எடுத்து ஆற்றலுள்ளவர்களை, கல்வி கற்றவர்களை, இளையோரை தெரிவு செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்களில் கட்டமைப்பு ரீதியில் இயங்குவதுடன், எல்லா மாவட்டங்களிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள கட்சியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாத்திரமே காணப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றங்களில் அனுபவம் வாயந்த தலைமைத்துவம் வகித்தவர்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். ஆகவே அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.