Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தமிழ் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மூதூர் பிரதேச தமிழ் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூரில் இயங்கிய 05 அறநெறிப் பாடசாலைகளை மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத்தின்கீழ் பதிவு செய்வதற்கு மூதூர் பிரதேச செயலக இந்துக் கலாச்சார உத்தியோகத்தரிடம் சென்றபோது அவர் அவ்வாறு பதிவு செய்ய முடியாது என தெரிவித்ததோடு, அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளுடன் தகாத வார்த்தை பிரயோகங்களுடன் நடந்து கொண்டதாகவும் தெரிவித்து இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அறநெறி ஆசிரியைகளால் முன்னெடுக்கப்பட்டது.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அறநெறி பாடசாலையின் ஆசிரியைகள் சுலோகங்களை ஏந்தியவாறு 05 அறநெறிப் பாடசாலைகளையும் பதிவு செய், அறநெறி பாடசாலை ஆசிரியைகளை அவமதிக்காதே, அறநெறிப் பாடசாலையை வெளியேற்று,கலாச்சார உத்தியோகத்தரை வெளியேற்று உள்ளிட்ட கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக், திருகோணமலை மாவட்ட இந்துக் கலாச்சார உத்தியோகத்தர் லக்குமிதேவி சிறிதரன் ஆகியோர் வருகை தந்ததுடன் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர். இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.