கடமைகளை மறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்; சபை அமர்வுகளில் கலந்துக்கொள்வதில்லை எனவும் தகவல்
.
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பொதுத்தேர்தல் தொடர்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும், அந்த ஆர்வம் மற்றும் உற்சாகத்தை நாடாளுமன்றத்துக்கு தெரிவான பின்னர் அதனை அவ்வாறே கடைபிடிக்க பல உறுப்பினர்களும் தவறுகின்றனர்.
இலங்கைத் தேசிய கணக்காய்வு அறிக்கை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, குறித்த நிலையில் எதுவித மாற்றங்களும் இல்லை என்பது தெளிவாகின்றது.
அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்காக போதுமான அளவு நேரத்தை ஒதுக்காமை ஆகும்.
கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய கணக்காய்வு அறிக்கையின படி, 105 அமர்வுகளுள் 200 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் சுமார் 3 அமர்வுகளில் மாத்திரமே கலந்துக் கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றில் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 225. அவற்றில் 200க்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு தமது கடமைகள் மறந்து விட்டதை குறித்த கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதேவேளை, 24 அமர்வுகளுக்கு 150க்கும் குறைவான உறுப்பினர்களே கலந்துக்கொண்டுள்ளதாகவும் 78 அமர்வுகளுக்கு 150க்கும் 200க்கும் இடைப்பட்ட அளவிலானவர்கள் கலந்துக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, ஒரு மாதக் காலப்பகுதிக்குள் நாடாளுமன்ற அமர்வுகளுக்காக 8 தினங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இந்த அனைத்து தினங்களிலும் அவர்களால் சமூகமளிக்க முடியவில்லை எனினும் இயலுமான நாட்களில் கலந்துக்கொள்ள வேண்டும்.
தமது கடமை பொதுமக்களுக்கு சேவை செய்வதே எனத் தெரிவிக்கும் உறுப்பினர்கள் குறைந்தது நாடாளுமன்ற அமர்விலாவது கலந்துக் கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவது நிச்சயம். ஆகவே, பொதுமக்கள் இவ்விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட தமது நடத்தையை பேணத் தெரியாதவர்களிடம் எமது தேவையை பூர்த்தி செய்ய கோருவதும் சற்று சிந்திக்கத்தக்கதாகும்.