Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஏஆர் ரகுமான் அற்புதமான மனிதர் - பிரிவுக்கு இதுதான் காரணம்

.

ஏஆர் ரகுமான் மீது தயவுசெய்து அவதூறு பரப்பாதீர்கள் என்று ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு சாய்ரா பானு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமா உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் சாய்ரா பானுவை கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஏ.ஆர்.ரகுமான் தம்பதிக்கு ரஹீமா, கதீஜா என 2 மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் தனது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையைவிட்டு பிரிவதாக சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலம் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'இருவரின் உறவில் ஏற்பட்ட உணர்வுப்பூர்வமான அழுத்தங்களால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்' என்று சாய்ரா பானு குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து ஏஆர் ரகுமானும், 'நாங்கள் திருமண வாழ்வில் 30 ஆவது ஆண்டை அடைவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லா விஷயங்களும் நாம் நினைப்பது போன்று நடப்பதில்லை. உடைந்த இதயங்களின் பாரத்தில் கடவுளின் சிம்மாசனமும் நடுங்கலாம்' என உணர்ச்சிப்பூர்வமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து ஏஆர் ரகுமான் விவகாரத்து குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. சிலர் அவதூறு கருத்துக்களை வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏஆர் ரகுமான், தனது விவாகரத்து குறித்து அவதூறு செய்திகள் வெளியிட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமது வழக்கறிஞர் மூலம் நேற்று நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதையும் படிங்க: "அவதூறு வீடியோக்களை நீக்குக" - யூடியூப் சேனல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வக்கீல் நோட்டீஸ்!

இந்த நிலையில் ஏஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானு தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் சாய்ரா பானு பேசுகிறேன். நான் தற்போது மும்பையில் உள்ளேன். ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் தயவு செய்து ஏஆர் ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர்.

இந்த உலகில் மிகவும் நல்ல மனிதர். கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. தற்போது மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால் தான் ஏஆர் ரகுமானிடம் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ள நினைக்கிறேன்.எனது உடல்நலக்குறைவு தான் இந்த முடிவுக்கு காரணம்.

அவர் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை மிகப் பெரியது. அவருக்கு வேறு யார் மீதும் எந்த தொடர்பும் இல்லை. அந்த அளவுக்கு சிறந்த மனிதர். அவரை நான் அந்த அளவுக்கு நேசிக்கிறேன். அவரும் கூட அதே அளவு காதலை வைத்திருக்கிறார். எங்கள் இருவருக்கும் தேவைப்படும் பிரேக் தான் எடுத்துள்ளோம். இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனது சிகிச்சை முடிந்தவுடன் கூடிய விரைவில் சென்னைக்கு திரும்புவேன். தயவு செய்து அவர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்" என்று அந்த ஆடியோவில் சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.