Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வடகொரியா பலூன்களைக் கொண்டு பலத்த பாதுகாப்புமிக்க தெற்கு எல்லை வழியாக குப்பைகளை அனுப்புகிறது என்று தென் கொரியாவின் இராணுவம் .

பலூன் பைகளில் 'அசுத்தமான கழிவுகள் மற்றும் குப்பைகள்' இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவம் பலூன்கள் மூலம் எல்லையில் மிதக்கும் பைகளின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து வருகிறது.

வடகொரியா பலூன்களைக் கொண்டு பலத்த பாதுகாப்புமிக்க தெற்கு எல்லை வழியாக குப்பைகளை அனுப்புகிறது என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

தெற்கில் இருந்து அனுப்பப்பட்ட பிரச்சார துண்டு பிரசுரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வட கொரியா குறைந்தபட்சம் 200 குப்பைப் பொதிகள் சுமந்த பலூன்களை தென் கொரியாவின் எல்லையூடாக தென் கொரியாவிற்குள்  அனுப்பியுள்ளது.  தென் கொரியாவின் பாதுகாப்பு மந்திரி ஷின் வோன்-சிக் இச் செயலானது  'கற்பனைக்கு எட்டாத சிறியபுத்தி கொண்ட தரம் குறைந்த  நடத்தை' என்று தெரிவித்தார்,  அதே நேரத்தில் இராணுவம் பலூன்கள் மூலம் எல்லையில் மிதக்கும் பைகளின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து வருகிறது.

பலூன்கள் குறித்து வட கொரியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை,ஆனால் துணை பாதுகாப்பு மந்திரி கிம் காங் ல், கழிவு காகிதம் மற்றும் அழுக்குகள் எல்லையில் அனுப்பப்படும் என்று எச்சரித்தார். தென் கொரியாவின் இராணுவம், பலூன்களைத் தொடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளது. அவற்றை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு செய்தி நிறுவனமான யோன்ஹாப் மூலம் தெரிவித்துள்ளது.தென் கொரிய தலைநகரில் உள்ள மக்கள் 'சியோலுக்கு அருகிலுள்ள வானத்தில் காணப்படும்'பலூன்களைத் தொடுவதைத் தவிர்க்குமாறும்இ அவை 'இராணுவத்தால் கையாளப்படுகின்றன' எனத் தெரிவிக்குமாறும் ஒரு பொதுச் செய்தி அறிவிக்கப் பட்டுள்ளது. ஏனைய பிராந்திய அரசாங்கங்களும் இதே போன்ற செய்திகளை ஒளிபரப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சியோல் நகர் மற்றும் எல்லைப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அனைவரும் 'வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்' என்று மாகாண அதிகாரிகளிடமிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.'அடையாளம் தெரியாத பொருளை' கண்டால்இ அருகில் உள்ள ராணுவ தளம் அல்லது காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பலூன் பைகளில் 'அசுத்தமான கழிவுகள் மற்றும் குப்பைகள்' இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.