பலதும் பத்தும் :- 06,03,2025 - முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது
மித்தெனிய முக்கொலை, தத்தெடுக்கப்பட்ட குழந்தை கொலை.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள அவரின் இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை தயாரித்து களனி பிரதேசத்தில் காணியொன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அது கிரிபத்கொடை புதிய நகரத்தை நிர்மாணிப்பதற்காக 2010ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணியாகும். இந்த காணி மோசடிக்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொலை.
மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே கொலையானது 5 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில்மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதில் இரண்டரை இலட்சம் ரூபா சந்தேகநபரின் மனைவியின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். எஞ்சிய பணம் வங்கியில் வைப்பிலிடப்படும் என்ற இணக்கப்பாட்டுடன் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் இதுவரை அந்த பணம் சந்தேகநபருக்கு வழங்கப்படவில்லை என்பது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். மீகஸ்ஆரே கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி மித்தெனிய பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்த அவரது 2 பிள்ளைகளும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கனடா விருப்பம்தெரிவித்துள்ளது.
கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த ஆகியோருக்குஇடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் விவசாயத் துறையில் மேற்கொள்ள வேண்டியமாற்றங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் காலநிலைக்கு உகந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தாம் செயற்பட்டுவருவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு விவசாய அபிவிருத்திக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கப்படும் எனவும் கனேடியஉயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருசந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய முன்னாள் அமைச்சருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேர்வின் சில்வா நேற்றிரவு(05) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பத்தரமுல்லையிலுள்ளஅவரின் இல்லத்தில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர்கள் இன்று(06) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியென சந்தேகிக்கப்படும் நபர் கைதுசெய்ய்பபட்டுள்ளார்.
மித்தெனிய பகுதியில் தலைமறைவாகியிருந்த 42 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டின் பின்னர் சந்தேகநபர் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மித்தெனிய பகுதியிலுள்ளகற்குழியொன்றுக்குள் கைவிப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுழியோடியின் ஒத்துழைப்புடன் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருணவிதானகமகே மற்றும் அவரின் 6 வயது மகள் மற்றும் 9 வயது மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
தத்தெடுக்கப்பட்ட குழந்தை கொலை - தம்பதியினருக்கு மரண தண்டனை
தத்தெடுத்து வளர்ப்பதற்காக பெறப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்துதீர்ப்பளித்தது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
யாழ் – திருச்சி விமான சேவை 30ஆம் திகதி ஆரம்பம்.
யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல்ஆரம்பிக்கப்படவுள்ளது. இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான சேவை திருச்சியில் இருந்து மதியம் 01.25க்குபுறப்படும் விமானம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மாலை 02.25 மணிக்கு வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 மணிக்கு சென்றடையும் என விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.