Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து- 51 பேர் உயிரிழப்பு

.

ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபாஸ் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.இங்கு 70-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுரங்கத்துக்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியதாவது:-நிலக்கரி சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கவும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.