Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

வெடிகுண்டு மிரட்டலால் திருச்சியில் பரபரப்பு

.

திருச்சியில் தனியார் பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, முன்னெச்சரிக்கையாக பாடசாலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி – திண்டுக்கல் சாலையில் கள்ளிக்குடி அருகே இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பாடசாலை செயல்பட்டு வருகிறது. அந்த பாடசாலையில் 1200-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இன்று வழக்கம் போல் பாடசாலை திறக்கப்பட இருந்த நிலையில், பாடசாலைக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் தாளாளருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இதனையடுத்து அவர் இது குறித்து ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலையடுத்து பாடசாலைக்கு சென்ற ராம்ஜி நகர் பொலிஸார், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் பாடசாலை முழுவதும் சோதனை செய்தனர்.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சல்யார் அனுப்பியது, எதற்காக அவ்வாறு அனுப்பினார்கள் என்பது குறித்து ராம்ஜி நகர் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஆர்.டி.ஓ தட்சிணாமூர்த்தி பாடசாலைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவரின் உத்தரவுப்படி பாடசாலையில் இருந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.