Breaking News
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற மஞ்சத் திருவிழா
.
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.
சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி, கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார்.
இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.