Iron Beam: ‘அயர்ன் டோமின் அட்வான்ஸ்ட் வெர்சன்’ – அறிமுகம் செய்ய உள்ள இஸ்ரேல்!
.
எதிரிகளின் ஏவுகணை அயர்ன் டோமின் எல்லையை தொட்ட உடனேயே, அதை இஸ்ரேலுக்குள் செல்லவிடாமல் எதிர் ஏவுகணையை ஏவி எதிர் தாக்குதல் நடத்தி எதிரி ஏவுகணையை கடலில் விழ செய்திடும்.
Iron Beam: அயர்ன் டோமின் அட்வான்ஸ்ட் வெர்சன் ( RAFAEL ADVANCED DEFENSE SYSTEMS )
பாலஸ்தீனம், லெபனான், ஈரான்…என இஸ்ரேல் தற்போது போரிட்டு வரும் நாடுகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகின்றன. இத்தனை நாடுகளிடம் இஸ்ரேல் போரிட்டாலும் அது இன்னமும் பலமாக உள்ளது என்றால் அதற்கு அமெரிக்கா ஒரு காரணமாக இருந்தாலும், இஸ்ரேலிடம் உள்ள அயர்ன் டோமும் ஒரு முக்கிய காரணம்.
Iron Beam: அயர்ன் டோமின் அட்வான்ஸ்ட் வெர்சன்
RAFAEL ADVANCED DEFENSE SYSTEMS
எதிரிகளின் ஏவுகணை அயர்ன் டோமின் எல்லையை தொட்ட உடனேயே, அதை இஸ்ரேலுக்குள் செல்லவிடாமல் எதிர் ஏவுகணையை ஏவி எதிர் தாக்குதல் நடத்தி எதிரி ஏவுகணையை கடலில் விழ செய்திடும். இதை தற்போது அயர்ன் பீம் மூலம் இன்னும் பலம் செய்ய உள்ளது இஸ்ரேல்.
அயர்ன் பீம் என்பது லேசர் தொழில்நுட்பம் ஆகும். இது தனது தொழில்நுட்பம் மூலம் சில மீட்டர்கள் முதல் பல கிலோ மீட்டர் வரை தன் ரேடருக்குள் வரும் எதிரிகளின் ஏவுகணையை கண்டுபிடித்து அந்த எதிரி ஏவுகணையின் இன்ஜின் போன்ற முக்கிய பகுதிகளை சூடாக்கி அதை செயலிழக்க செய்துவிடும்.
இந்த தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு இஸ்ரேலில் அமைக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. இதன் விலை 500 மில்லியன் டாலர்கள் என்கிறார்கள்.