பின்லேடன் மகன் உயிருடன் இருக்கிறார்; மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் அல்கொய்தா?
.
கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார் என திடுக் தகவல் வெளியாகியுள்ளது.
2001-ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன். அமெரிக்க படையால் தேடப்பட்டு வந்த நிலையில், 2011ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் கிராமம் ஒன்றில் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் அமெரிக்காவின் ‛‛கடற்படை சீல்ஸ்” தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக்கொன்று உடலை கடலில் வீசியது.
இந்த வீடு பின்லேடனின் மூன்றாவது மனைவியின் மகனான ஹம்சா பின்லேடனின் வீடு எனவும், ஒசாமா பின்லேடன் சுட்டுகொல்லப்பட்ட போது ஹம்சா பின்லேடன் அங்கு இல்லை. எனவும். 2019-ம் ஆண்டு ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்தது.
இதனை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. இதனால் முரணாக ஊடகங்களில் செய்தி வெளி வந்தன. எனினும் ஹம்ஸா பின்லேடனை உலகளாவிய பயங்கரவாதியாக வகைப்படுத்தியது அமெரிக்கா.
இந்நிலையில் ‛‛தி மிர்ரர் ‘ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார் என ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் எதிர்ப்பு இராணுவ அமைப்பான என்.எம்.எப். என்ற அமைப்பு தெரிவிக்கிறது என அவை (தி மிர்ரர்) கூறி உள்ளது.
2021 ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றிய போது ‘பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கான பயிற்சி மையம் அமைத்து 450 பாகிஸ்தானியர்கள் ஹம்சா பின்லேடனுக்கு பாதுகாப்பு அரணமாக இருந்து வருகின்றனர். அவரது கட்டளையின் கீழ், அல் கொய்தா மீண்டும் ஒருங்கிணைத்து வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது’ .
மேலும் ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல் கொய்தா விவகாரங்களை கவனித்து வரும் அய்மன் அல்-ஜவாஹிரியுடன் ஹம்சா பின்லேடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.