Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எனது கடவுள் பிரபாகரன்; அர்ச்சுனா எம்பி!

,

எனது கடவுள் பிரபாகரன் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , சிங்கள மக்கள் தமக்காக சேவையாற்றிய மஹிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா எம்பி நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அர்ச்சுனா எம்பி,

பிரபாகரன் எனது கடவுள் என்பதே எனது நிலைப்பாடாகும். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால், இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் தலைவர் அல்லர், ஆனால் அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால், அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவைக் காட்டிக் கொடுத்துள்ளனர்.

நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் எனக் கூறிய போது நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது. ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன். இன்று எனக்கு பெற்றோர் இல்லை. எனவே, என் பெற்றோருக்குப் பதிலாக என் சகோதரி மற்றும் நாமல் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன்.

எனவே, நாமல் ஏதாவது தவறு செய்திருந்தால், அவர் மீது வழக்குத் தொடருங்கள் பிரபாகரன் எனது தலைவர் என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன். அவர் பயங்கரவாதியா என பல முறை கேள்வி எழுப்பியும் யாரும் அதற்கு பதிலளிக்கவில்லை.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்தால் வடக்கில் வாக்கு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை அங்கிருப்போருக்குத் தெரியும். என்னைப் பைத்தியம் என்று கூறுவதால் எனக்குக் கவலையில்லை என்றும் அர்ச்சுனா எம்பி கூறினார்.